பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 5-ந்தே தி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 8-ந் தேதி காலை தமிழக எலலையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. அன்று இரவே பூண்டி ஏரியை சென்றடைந்தது. பூண்டி ஏரிக்கு ஆரம்பத்தில் வினாடிக்கு 50 கன அடிவீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது.

அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து. நேற்று காலை வினாடிக்கு 610 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.60 அடியாக பதிவானது. 1.246 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

788 கனஅடி தண்ணீர் வெளியேற்றம் இத்தனை நாட்களாக பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 788 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 390 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 398 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதே போல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com