அதிகரிக்கும் வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க உத்தரவு

வெப்ப அலையால் மக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிகரிக்கும் வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க உத்தரவு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகரிக்கும் வெப்ப அலையால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே போல், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பொது மருத்துவமனைகளிலும் வெயில் பாதிப்பு சிகிச்சைக்காக ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற சிறப்பு வார்டு அமைக்க அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com