இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடைப்பெறுகிறது. #RameswaramFishermen
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டம்
Published on

ராமநாதபுரம்,

இலங்கை சிறையில் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது படகுகள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே மீனவ அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com