சுதந்திர தின விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Published on

ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி மையம்

அறந்தாங்கி அருகே எரிச்சி குரும்பூரில் ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி மையம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பயிற்சி மைய தாளாளர் ராஜுவ் தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கீரனூர் மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரேகாராஜுவ் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் காவல்துறைக்கான அனைத்து பயிற்சியும், போட்டிகளும் நடைபெற்றது. சுதந்திர தினவிழா மிக சிறப்பாக கொண்டாடிய போலீஸ் பயிற்சி மைய மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி மைய ஆசிரியர் சங்கீதா, விளையாட்டுத்துறை ஆசிரியர் மணிமேகலை, போலீஸ் பயிற்சி மைய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வர்த்தக நல சங்கம்

மணமேல்குடியில் வர்த்தக நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கணேசன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் பரணி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் வாசன் சரவணன், முன்னாள் தலைவர் அன்பழகன், துணை செயலாளர் ரஜினி, மாவட்ட துணை தலைவர் வாஹிது உள்பட உயர்மட்ட, செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி ஏற்றி வைத்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை நகராட்சி

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி, நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தங்க பதக்கமும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com