சுரண்டை நகராட்சியில் சுதந்திர தின விழா

சுரண்டை நகராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுரண்டை நகராட்சியில் சுதந்திர தின விழா
Published on

சுரண்டை:

சுரண்டை நகராட்சியில் சுதந்திர தின கொடியேற்ற விழா நடந்தது. நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன் முன்னிலை வகித்தார். சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். தொடர்ந்து நகராட்சியில் தயாரிக்கப்பட்ட உரங்களை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சுரண்டை நகராட்சி கவுன்சிலருமான வே. ஜெயபாலன் விவசாயிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து 77 மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் எஸ்.ஐ.கைலாச சுந்தரம், இளநிலை உதவியாளர் முருகன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆறுமுகச்சாமி, சாமுவேல் மனோகர், அன்னபிரகாசம், நகராட்சி கவுன்சிலர்கள் பரமசிவன், பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரமேஷ், சாந்தி தேவேந்திரன், கல்பனா அன்னப்பிரகாசம், அந்தோணி சுதாஜேம்ஸ், சிவ சண்முகஞானலட்சுமி, செல்வி, ராமலெட்சுமி, அம்சா பேகம், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி பணியாளர் சங்கீதா நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com