சுயேச்சை கவுன்சிலர் பா.ஜ.க.வில் இணைந்தார் - சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க.வின் பலம் 2 ஆக உயர்வு

சுயேச்சை கவுன்சிலர் பா.ஜ.க.வில் இணைந்தார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க.வின் பலம் 2 ஆக உயர்வு.
சுயேச்சை கவுன்சிலர் பா.ஜ.க.வில் இணைந்தார் - சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க.வின் பலம் 2 ஆக உயர்வு
Published on

பெருநகர சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டில் சுயேச்சை சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லியோ சுந்தரம். இவர் சமீப காலமாகவே பா.ஜ.க.வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று சந்தித்து, லியோ சுந்தரம் தன்னை பா.ஜ.க. கட்சியில் இணைத்துக்கொண்டார். பா.ஜ.க.வில் இணைந்த அவரை வரவேற்று, அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே ஒரு பா.ஜ.க. உறுப்பினர் இருக்கிறார். லியோ சுந்தரம் இணைந்ததின் மூலம் சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க. உறுப்பினர்களின் பலம் 2 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com