எல்லைகளில் புதிய சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது - ராணுவ தளபதி நரவனே பேச்சு

எல்லையில் புதிய சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்தார்.
எல்லைகளில் புதிய சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது - ராணுவ தளபதி நரவனே பேச்சு
Published on

குன்னூர்,

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாள் பயணமாக அங்கு வந்தார்.

ராணுவ பயிற்சி கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி விவரங்களை நரவனேவுக்கு கல்லூரியின் உயர் அதிகாரி கேலான் எடுத்துரைத்தார். பயிற்சி பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ராணுவ தளபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் உயர்தரமான பயிற்சி அளித்து வருவதாக கல்லூரிக்கு நரவனே பாராட்டு தெரிவித்தார். கல்லூரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் உள்ள நிலவரம் மற்றும் அதன் எதிர்கால தாக்கம் என்ற தலைப்பில் ராணுவ தளபதி நரவனே பேசினார்.

அவர் பேசியதாவது:-

எல்லைகளில் புதிய சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது. அவற்றை எல்லாம் இங்கு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து அறிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com