கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில் இந்திய ராணுவ தென்னிந்திய பகுதி தளபதி ஆலோசனை

எதிர்கால போர் சூழல்களுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை,
தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன் பீர் சிங் பரார் இன்று சென்னை ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில், அதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை பெருக்குதல், அவற்றை உரிய நேரத்தில் ஒப்படைத்தல், உற்பத்தியில் தன்னிறைவை ஊக்குவித்தல் போன்றவற்றின் அவசியத்தை அப்போது அவர் வலியுறுத்தினார். சிந்தூர் நடவடிக்கையின்போது இத்தகைய அணுகுமுறைகள் பெரிதும் பயனளித்ததை அவர் சுட்டிக்காட்டினார். எதிர்கால போர் சூழல்களுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
லெஃப்டினண்ட் ஜெனரல் பரார் கவச வாகன நிறுவன வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
Related Tags :
Next Story