சென்னை கடற்கரை அருகே 5, 6-ந்தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி

பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 37-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை,
கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல் மாசடைவதை தடுப்பது தொடர்பான ‘தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை திட்டம்’(NATPOLREX-X) குறித்த இந்திய கடலோர காவல் படையின் பயிற்சி, சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் முக்கிய துறைமுக நிர்வாகத்தினர், எண்ணெய் கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 29 நாடுகளைச் சேர்ந்த 37-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






