3வது முறையாக வென்று புதிய வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

இறுதிப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.
3வது முறையாக வென்று புதிய வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
Published on

சென்னை,

டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக வென்று புதிய வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‘கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. இதோடு 3வது முறையாக டி.20 உலக கோப்பையை வென்று இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

குஜராத் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற டி.20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களும், இஷான் கிஷான் 54, அபிஷேக் சர்மா 52 ரன்களும் பெற்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கும் அதன் வீரர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்படுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com