

இந்திய ரெயில்வே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரெயில் பாதுகாப்பு (ஏ.டி.பி.) அமைப்பான ‘கவாச்சில்' தொழில்நுட்ப ஆய்வுகளை மேலும் மேம்படுத்துகிறது. இற்காக இந்திய ரெயில்வே சிக்னல் என்ஜினீயரிங் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் (ஐ.ஆர்.ஐ.எஸ்.இ.டி) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செகந்திராபாத்தில் உள்ள முதன்மையான பயிற்சி நிறுவனம், இந்திய ரெயில்வேயின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தரவு அறிவியல், பெரிய தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்த உள்ளது.
இதற்காக சி‑டிஏசி (நொய்டா) போன்ற முக்கிய தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது என்று இந்திய ரெயில்வே சிக்னல் என்ஜினீயரிங் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள் கூறினர்.