

சென்னை,
'செயற்கை சூரியனை உருவாக்கும் இந்திய விஞ்ஞானிகளின் இந்த முயற்சி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் இயற்பியல் துறைக்கான 'பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. இங்கு அணுக்கரு இணைவு ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக காந்தப்புலங்களை பயன்படுத்தும் 'டோகாமாக்கில்' ஒரு 'உயர் சக்தி வெற்றிட மின்னணு சாதனம்' மூலம் பரிசோதனைக்குரிய பிளாஸ்மா கட்டுப்பாட்டுக்கருவி அல்லது 'செயற்கை சூரியன்' உருவாக்கப்பட்டு வருகிறது. இது 82.6 ஜிகாஹெர்ட்ஸ்' மற்றும் 400 கிலோ வாட் சக்தி வாய்ந்ததாகும். இந்தியாவின் இந்த முயற்சி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், செயற்கை சூரியன் மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை. எஸ்.எஸ்.டி-1 என்பது ஒரு சோதனை அணுக்கரு இணைவு ஆராய்ச்சி எந்திரம். அது ஒரு வணிக மின் உற்பத்தி நிலையம் அல்ல. இந்த புதிய ‘கைரோட்ரான் பிளாஸ்மா'வை சூடாக்கி ஆய்வு செய்வதற்கான ஒரு கருவியாகும். இந்தியா ஏற்கனவே அணுக்கரு இணைவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. தொடர்ந்து அணுக்கரு இணைவு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
உண்மையான நட்சத்திரங்களுக்கு ஆற்றல் அளிக்கும் அணுக்கரு இணைவை பிரதிபலிப்பதே இதன் நோக்கமாகும். இது இலகுவான அணுக்கருக்களை மிகக்கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் கீழ் ஒன்றிணைய செய்கிறது. இந்திய இணைவு சோதனைகள் ஏற்கனவே 200 மில்லியன் டிகிரி செல்சியசுக்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை எட்டியுள்ளன. உயர் அதிர்வெண் மைக்ரோ அலைகளைப் பயன்படுத்தி கைரோட்ரான் பிளாஸ்மாவை வெப்பப்படுத்துகிறது
இது உலைக்குள் உள்ள பொருட்களை சூடாகவும் நிலையாகவும் வைத்திருக்க உதவுகிறது. நட்சத்திரங்கள் புவியீர்ப்பு விசையை கொண்டு இதை செய்கின்றன, ஆனால் பூமியில் நமக்கு காந்தங்கள் தேவைப்படுகின்றன. நாம் இதன் மூலம் இன்னும் போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், இந்த மேம்பாடு தூய்மையான, நீடித்த ஆற்றலை நோக்கிய ஒரு பெரிய நகர்வா கும். எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் இது உதவும். இந்த முயற்சி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.