முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இண்டிகோ நிறுவனம்

முதல்-அமைச்சர், ஜோசப் விஜய்க்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இண்டிகோ நிறுவனம்
Published on: 

சென்னை,

எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து கொண்டது.

பாராட்டு

இதுதொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமான டர்பைன் எரிபொருள் (ATF) மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (VAT) குறைக்கும் தமிழக அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், இந்த முற்போக்கான முயற்சிக்கு முதல்-அமைச்சர், ஜோசப் விஜய்க்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகள் விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து, இந்தியாவில் மேலும் வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலை உருவாக்கப் பங்களிக்கின்றன.

இதுபோன்ற முற்போக்கான முயற்சிகள் விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என நம்புகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com