ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்றவர் கைது

தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார்.
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்றவர் கைது
Published on

ராமநாதபுரம்,

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஜிபான் (வயது 26). இவர் இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விமானத்தில் நேபாளம் சென்றார். அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு வந்து, ரெயிலில் ராமேசுவரம் வந்தார்.

இந்த நிலையில் தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார். இதற்காக மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்பிரிவு போலீசார், அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவரது மனைவி சுவிட்சர்லாந்தில் வேலை பார்த்து வருவதாகவும், அதற்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு நேபாளம் சென்றதாகவும், ஆனால் அங்கு செல்ல முடியாததால் மீண்டும் இலங்கைக்கு தப்பி செல்ல ராமேசுவரம் வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து மண்டபம் போலீசார் பாஸ்போர்ட் சட்டத்தின்படி ஜிபானை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com