குஜராத்தில் தாயின் நினைவு நாளில் 290 விவசாயிகளின் கடனை அடைத்த தொழில் அதிபர்கள்


குஜராத்தில் தாயின் நினைவு நாளில் 290 விவசாயிகளின் கடனை அடைத்த தொழில் அதிபர்கள்
x

சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

சூரத்,

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர். அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர்.

விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்தால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை. சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜிராவால் மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது.

கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். விவசாயிகள் அனைவரும் தொழில் அதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த சம்பவம் குஜராத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story