முதல்-அமைச்சர் விஜய்யுடன் ‘செல்பி' எடுத்துக்கொண்ட தொழில் அதிபர்கள்

மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா கம்பீரமாக பேசியதை விஜய் உன்னிப்பாக கவனித்தார்.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் ‘செல்பி' எடுத்துக்கொண்ட தொழில் அதிபர்கள்
Published on

சென்னை,

சென்னையில் நடந்த த.வெ.க. அரசின் முதல் மாநாட்டில் ரஷியா, நியூசிலாந்து உள்பட சர்வதேச நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் கையெழுத்தான 97 ஒப்பந்தங்கள் மூலம் 23 மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது பெரும்பாலான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் சிறிது நேரம் பேசினார். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் மேடையிலேயே விஜய்யுடன் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை குறிக்கும் வகையில் 'வி' என்ற குறியீட்டுடன் கூடிய பேட்ஜை விஜய் தனது கோட் மீது அணிந்திருந்தார். மாநாட்டில் பங்கேற்ற தொழில் அதிபர் ஒருவர் பொக்லைன் மினியேச்சரை வழங்கினார். அதனை விஜய் ரசித்து பார்த்தார். மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா கம்பீரமாக பேசியதை விஜய் உன்னிப்பாக கவனித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com