செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு

செஞ்சி அருகே பச்சிளம் ஆண் குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு
Published on

செஞ்சி, 

தாய்க்கு உடல்நிலை பாதிப்பு

செஞ்சி அருகே அனந்தபுரம் கீழ்மலையை சேர்ந்தவர் எட்டியான் மகள் ஜீவா. இவருக்கும், விழுப்புரம் அருகே தாராபுரத்தை சேர்ந்த ராஜாராமன் என்பவருக்கும் திருமணமாகி கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், ஜீவாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் குழந்தை ஜீவாவின் அக்காள் தமிழ்மொழியின் பராமரிப்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.

பச்சிளம் குழந்தை சாவு

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை உறவினர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com