தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

மதுரையில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி சுவாதி (21 வயது). இவருக்கு ஏற்கனவே முதல் பெண் குழந்தை பிறந்து 45 நாளில் இறந்து விட்டது. இந்த நிலையில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் எப்பொழுதும் போல் சுவாதி குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை சோழவந்தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com