மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3-வது நாளாக 12,500 கனஅடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 3-வது நாளாக, இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 12,500 கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3-வது நாளாக 12,500 கனஅடியாக நீடிப்பு
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து 3-வது நாளாக விநாடிக்கு 12,500 கன அடியாக நீடிக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே போல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 15,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 12,500 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து 3-வது நாளாக, இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 12,500 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com