அம்மா உணவகங்கள் குறித்த தகவல்கள் தவறானவை - சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

அம்மா உணவகங்கள் குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அம்மா உணவகங்கள் குறித்த தகவல்கள் தவறானவை - சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
Published on

சென்னை,

அம்மா உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை என ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ, எஸ்.பி.வேலுமணி, அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் முடங்கும் நிலை உள்ளதாகக் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, எந்த இடத்திலும் அம்மா உணவகங்களை முடக்கும் எண்ணமில்லை எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகங்கள் குறித்து பல்வேறு புகார்கள் வருவதாகவும், அம்மா உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், ஆதாரத்தோடு குற்றம்சாட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com