

சென்னை,
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளட்ர் பிரெமலதா விஜயாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் 234 தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் என மொத்தம் 320 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்துவது, கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் அதனை ஏற்பதாக கட்சி பொறுப்பாளர்கள் உறுதியேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவை விஜயகாந்த நாளை அறிவிப்பார் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.