கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பகிர்ந்த தகவல்

கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பகிர்ந்த தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார், கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ வ வேலு, கொடைக்கானலுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதி பெற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com