நவ. 3 ஆம் தேதி முதல்-அமைச்சர் விஜய் ஈரோடு செல்ல உள்ளதாக தகவல்

சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவ. 3 ஆம் தேதி முதல்-அமைச்சர் விஜய் ஈரோடு செல்ல உள்ளதாக தகவல்
Published on: 

ஈரோடு,

நவம்பர் 3ஆம் தேதி முதல்-அமைச்சர் விஜய் ஈரோடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் விஜய், ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் 3 ஆம் தேதியில் தனியார் கல்லூரியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் விஜய் ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரோட்டில் சாலை வலம் செல்லவும் முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com