திருச்செந்தூர் கோவிலில் மனிதாபிமானமற்ற செயல்: கர்ப்பிணிப் பெண்ணை வெளியே தள்ளிய ஊழியர்கள்

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்களின் அதீத கட்டண வசூலும், ஊழியர்களின் மனிதாபிமானமற்ற, அநாகரிகமான பொது மக்கள் அணுகுமுறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் மனிதாபிமானமற்ற செயல்: கர்ப்பிணிப் பெண்ணை வெளியே தள்ளிய ஊழியர்கள்
Published on

தூத்துக்குடி,

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். நேற்று அதிகாலை நேரத்தில் தனது மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர்.

அப்போது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த கோவில் ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை வெளியே தள்ளி, முகத்திற்கு நேரே கேட்டைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினர் கூறுகையில், "திருச்செந்தூர் கோவிலில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் இந்த வி.ஐ.பி. கலாசாரம் மற்றும் கட்டணக் கொள்ளை போன்ற அவலப் பிரச்சினைகளுக்குத் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை எளிய மக்களும், பெண்களும் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.

திருச்செந்தூர் கோவிலில் வி.ஐ.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சாமானிய பக்தர்கள் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் வதங்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இவற்றுடன் அர்ச்சகர்களின் அதீத கட்டண வசூலும், ஊழியர்களின் மனிதாபிமானமற்ற, அநாகரிகமான பொது மக்கள் அணுகுமுறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com