கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வடக்குமாங்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Published on

மெலட்டூர்;

அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சி, பெருங்கரை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கலைச்செல்விகனகராஜ் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர் சவுந்தரராஜன், கால்நடை உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் 50- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் வடக்குமாங்குடி, பெருங்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வடக்குமாங்குடி ஊராட்சிமன்றம் மற்றும் கால்நடைதுறையினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com