கார் மோதி தொழிலாளி படுகாயம்

கார் மோதி தொழிலாளி படுகாயம்
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டாண்ட அள்ளியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை ஜிட்டாண்டஅள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பஞ்சப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கூலிகானூர் அருகே சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மோட்டர்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜப்பனை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com