சேந்தமங்கலம் அருகேதேரில் சிக்கி தொழிலாளி படுகாயம்

சேந்தமங்கலம் அருகேதேரில் சிக்கி தொழிலாளி படுகாயம்
சேந்தமங்கலம் அருகேதேரில் சிக்கி தொழிலாளி படுகாயம்
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவகுமார் (வயது 46) என்பவர் பங்கேற்று தேரை இழுத்தார். அந்தசமயம் அவர் எதிர்பாராதவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com