ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Published on

விராலிமலை:

விராலிமலை தாலுகா மேலபச்சக்குடியை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது மகன் நாகர்ஜுன் (வயது 19). கடந்த 16-ந் தேதி விராலிமலை பட்டமரத்தான் கோவில் சார்பில் அம்மன் குளத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாகர்ஜுன் காளையை அடக்க முயன்ற போது காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகர்ஜுன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com