மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி

மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி
Published on

தேவகோட்டை, 

ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பயிற்சியை கல்லூரி தலைவர் லெட்சுமணன் செட்டியார் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினர். காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் பிரகாஷ், கல்லூரியின் முன்னாள் முதல்வரும், சுயநிதி பிரிவு இயக்குனருமான அருணாச்சலம், கல்லூரியின் முன்னாள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், தமிழ்த்துறை பேராசிரியருமான இளங்கோ ஆகியோர் பேசினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மூர்த்தி, பேராசிரியர்கள் நாகபர்வதம், மோகன், அழகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com