

கரூர்,
கரூர் மாவட்ட கிளை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதன்மை குற்றவியல் நடுவர் (ஓய்வு) சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். 7-வது ஊதியக்குழுவின்படி நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை கொடுத்து உதவ தமிழக அரசை கேட்டு கொள்வது. மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை ஜனவரி மாதம் முதல் கொடுத்து உதவ தமிழக அரசை கேட்டு கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.