பரமத்திவேலூர் பகுதியில்வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் வாகன சோதனை

பரமத்திவேலூர் பகுதியில்வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் வாகன சோதனை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது உரிய அனுமதி சான்று இ்ல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய கழிவுநீர் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அந்த வாகனங்கள் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் தார்பாய் போடாமல் சென்ற 2 மணல் லாரிகளுக்கு தணிக்கை சீட்டு வழங்கி தார்பாய் அமைத்த பின் லாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

மேலும் அனுமதியின்றி ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட வாகனத்துக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இந்த வாகன சோதனை பரமத்திவேலூர் வட்டார பகுதியில் தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com