லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு

கும்ளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு செய்யப்பட்டது.
லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாறை ஓவியங்கள், கல் திட்டைகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோவில்களை கண்டறிந்து அவற்றின் வரலாற்று சிறப்பை ஆராய்ந்து ஆவணப்படுத்தி பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட்டும் வருகிறது.

அந்த வகையில் தளி அருகே கும்ளாபுரத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது அங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலானது 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், கும்ளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடியதாக கட்டப்பட்டுள்ளது. கருவறைக்கு மேல் உள்ள விமானப்பகுதி அண்மை காலத்தைச் சேர்ந்தது. இந்த கோவிலின் சிறப்பு கருவறையை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த ஆய்வின்போது, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், வரலாற்று ஆய்வாளர் சரவணக்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த சிக்கண்ணா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com