கெலமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் சாலையில் வெள்ளப்பெருக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

கெலமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் சாலையில் வெள்ளப்பெருக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
கெலமங்கலம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் சாலையில் வெள்ளப்பெருக்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதி கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்கொண்டப்பள்ளி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் சூடகானப்பள்ளி, அச்செட்டிப்பள்ளி, எடப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம்.

இந்த நிலையில் தளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அக்கொண்டப்பள்ளி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் நீர்நிலை பாதைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக ராஜா கால்வாய்க்கு செல்லாமல் மழைநீர் தரைப்பாலம் மற்றும் தார்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் அந்த பகுதிக்கு நேரில் சென்று சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து மழை வெள்ளநீரை வடிய வைக்கவும், கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தார். அப்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன், பைரமங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் வெங்கடேஷ் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com