மதுரை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு
Published on

உசிலம்பட்டி:

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் இன்று மாலை 5.40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த விமானத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் வந்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதுபோல், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த விமானத்தில் ஓ.பன்னீர் செல்வம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று, தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

மதுரையிலிருந்து தேனியில் நடைபெறும் விழாவிற்கு செல்லும் வழியில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அலுவலகத்தில் இருந்த சைலேந்திர பாபு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் உள்ள கல்வெட்டின் அருகே நின்று புகைப்படம் எடுத்துவிட்டு தேனி நோக்கி சென்றார். இந்த ஆய்வின் போது சைலேந்திர பாபு - உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com