புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Published on

காவேரிப்பாக்கம்

புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டின் வளர்ச்சி திட்ட பணிகளின்கீழ் நெற்களம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது சைபுதீன், தண்டாயுதபாணி, தலைவர் சுந்தரம், துணை தலைவர் அசோக், ஊராட்சி செயலாளர் ரமேஷ், உள்பட பலர் உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com