செம்மஞ்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செம்மஞ்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக விளையாட்டு திடல் அமைக்க அதற்கான இடத்தை பார்வையிட்டார்.
செம்மஞ்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
Published on

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பின்புறம் புதிதாக விளையாட்டு திடல் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கான இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் விளையாட்டு திடல் அமைக்க உள்ள காலி இடங்களின் வழித்தடம் மற்றும் இடத்தின் மாதிரி வரைப்படம் மூலம் அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் அதிலுள்ள சிக்கல்கள், ஆக்கிரமிப்பு பிரச்சினைகள், வழித்தடங்கள் குறித்தெல்லாம் விவரித்தனர்.

அப்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com