கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
Published on

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே அம்மையகரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் கிராம கணக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலரிடம், பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவை, நிலவரி வசூல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை இணைய வசதி மூலமாக விரைந்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com