

சென்னை,
செய்தியாளர்கள் சந்திப்பில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
த.வெ.க. தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லை. அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்று விட்டோம் என்று பொருளல்ல.
கூட்டணி தொடர்பாக தான் ஆதரவு கட்சிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அமைச்சரவையில் இடம் பெற்றதும் திமுகவுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பேசுகிறார்கள். திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு தொடர்கிறது. மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு தான் த.வெ.க. அரசை விசிக ஆதரித்தது. வி.சி.க. முன்னாள் நிர்வாகி தி.மு.க.வில் இணைந்தது அதிர்ச்சி அளித்தது.
என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனாவின் 'பள்ளி ஆய்வு' குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது இந்தியா முழுவதும் வாடிக்கை ஆகியுள்ளது. ரீல்ஸ் பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால் நாங்கள் சுட்டிக் காட்டுவோம். அமைச்சர்கள் அதை உள்வாங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.