மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு
Published on

சென்னை,

மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆணையாளர் கெளஷிக் ஆய்வு செய்தார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆணையாளர் எச்.ஆர்.கெளஷிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு

கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127க்குட்பட்ட வி.வி.கோவில் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாகவும், ஐயப்பன் கோவில் தெருவில் முடிவுற்ற மழைநீர் வடிகால் பணி, அண்ணாநகர் மண்டலம் வார்டு-100க்குட்பட்ட கீழ்பாக்கம் ஆர்ம்ஸ் சாலை, வார்டு-102க்குட்பட்ட அண்ணாநகர் 'L' பிளாக் மற்றும் வார்டு-106க்குட்பட்ட நேரு தெரு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி

இதனைத் தொடர்ந்து, வார்டு-127க்குட்பட்ட வி.வி.கோவில் தெரு, சேமத்தம்மன் கோவில் தெரு மற்றும் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com