தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2வது நாளாக ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2வது நாளாக ஆய்வு
Published on

தஞ்சை,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் இருந்த ராஜராஜசோழன் சிலை மற்றும் அவருடைய பட்டத்தரசியான லோகமாதேவி சிலைகள் திருட்டு போனது. இந்த சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்தனர். இந்த சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தஞ்சை பெரியகோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில், தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என மொத்தம் 55-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். சிலைகளின் உறுதித்தன்மை குறித்து நேற்று 6 மணி நேரம் ஆய்வு நடந்தது.

இந்த நிலையில் இன்று 2வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பெரிய கோயிலில் உள்ள பழைய ராஜராஜ சோழன் சிலையின் தொன்மைதன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com