

சேலம்,
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சேலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 முடித்துவிட்டு, என்ஜினீயரிங் கலந்தாய்விற்காக காத்திருக்கிறாள். இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றாள். பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. சிறுமியை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் மாயமான சிறுமி குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 19) பெங்களூருவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பெங்களூரு விரைந்து சென்று சிறுமியை மீட்டதுடன் அவரை கடத்தி சென்ற வாலிபரை பிடித்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமிக்கும், கஜேந்திரன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கஜேந்திரன், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கஜேந்திரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். இந்த சம் பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.