இன்ஸ்டா காதல்: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர் ஒருவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இந்த நிலையில் அந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலியை வரவழைத்தார். பின்னர் காதலியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் அந்த மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதையடுத்து கட்டிட தொழிலாளி தன்னை கர்ப்பமாக்கியது குறித்து அந்த மாணவி குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி விசாரணை நடத்தி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தார். மேலும் தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.






