

கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை யில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் மூலம் பாலமுருகனுக்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து செல்போனில் இருவரும் பேசி வந்தனர். இதற்கிடையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கில் பாலமுருகனை கைது செய்தனர்.