

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் வெங்கடேசன் (30 வயது). இவருக்கும் 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி சிறுமியை ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் அழைத்துச் சென்று ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார். அப்போது கோவிலில் இருவரின் ஆதார் கார்டுகளை பார்த்தபோது திருமணம் செய்ய வந்த பெண் சிறுமி என்பதும் 11-ம் வகுப்பு மாணவி என்பதும் தெரியவந்தது.
தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் மலர்க்கொடி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை அழைத்து அவரது உறவினரிடம் ஒப்படைத்து அறிவுரை வழங்கினர்.