இன்ஸ்டா பழக்கம்: இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது

இளம்பெண் படத்தை ஆபாசமாக 'மார்பிங்' செய்து மிரட்டல் விடுத்த கல் லூரி மாணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்டா பழக்கம்: இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது
Published on

நெல்லை.

நெல்லையை சேர்ந்த 33 வயது பெண் ஒருவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கணபதி (20) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இளம் பெண் கணபதியுன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கணபதி, இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக 'மார்பிங்' செய்து பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதியை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணபதி சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com