கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

புகழூர் நகராட்சி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்
Published on

புகழூர் நகராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு ரூ.36 லட்சத்தில் 38 இடங்களில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கான தாடக்க விழா நடைபெற்றது.

விழாவில், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் ஈ.ஜ.டி. பாரி சர்க்கரை ஆலையின் துணைப்பொது மேலாளர் (இயக்கம்) தர்மலிங்கம், மேலாளர் (மனித வளம்) தனபால், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை பூஜை செய்து தாடங்கி வைத்தனர். புகழூர் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், புகழூர் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மலர்கொடி வரவேற்று பசினார். இதில், நகராட்சி மேற்பார்வையாளர் ரவி, நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com