கால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

குமரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

குமரி,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளின் நீர் திறப்பு விவரங்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com