முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு


முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை -  அண்ணாமலை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Jun 2025 2:58 PM IST (Updated: 20 Jun 2025 2:58 PM IST)
t-max-icont-min-icon

முதல்வர் மருந்தகத்தில் தொடக்கம் முதலே போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;

"மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.

மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம். பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். நான்காண்டு காலமாக, திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story