தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்
Published on

சென்னை,

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து உள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்கு உரியது. நிகழ்ந்த சம்பவத்திற்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com