விபத்தில் பலியான தனியார் நிறுவன துணை தலைவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: காப்பீட்டு நிறுவனதிற்கு உத்தரவு

சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விபத்தில் பலியான தனியார் நிறுவன துணை தலைவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு:  காப்பீட்டு நிறுவனதிற்கு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை அண்ணாநகர் மேற்கு விஸ்தரிப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 39). இவர் சென்னையில் ஐ.டி. பார்க்கில் ஒரு நிறுவனத்தில் விற்ப னையாளர் மேலாண்மை பிரிவில் துணை தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றார். அப்போது புதுச்சேரி இருளர் குடியி ருப்பு அருகே எதிர்திசையில் ஒரு ஆட்டோ வந்த நிலையில், அந்த ஆட் டோவை மற்றொரு கார் அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றபோது, ராம கிருஷ்ணனின் கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாப மாக இறந்தார்.

இந்த விபத்தில் உரிய இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இறந்த ராமகிருஷ்ண னின் குடும்பத்தினருக்கு தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.3 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரத்து 665 வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com